Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலர் இரா. முத்தரசன்

இலங்கையைப் போல பொருளாதார நெருக்கடியும், மக்கள் போராட்டமும் இந்தியாவிலும்  நடைபெறும்  காலம் வெகுதொலைவில் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்  இரா. முத்தரசன்தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாவட்ட அலுவலகத்தில்  செய்தியாளர்களிடம் முத்தரசன் மேலும்  தெரிவித்ததாவது:  நூறுநாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்து வருகிறது. மேலும் நூறுநாள் வேலை திட்டம் கர்நாடாகவில் 150 நாட்கள் உயர்த்தியுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் 200 நாட்களாக உயர்த்த வேண்டும். ஊதியம் ரூ. 600 கொடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் நூறு நாள் வேலை கொடுக்க வேண்டும். அதில் தறுகள் நடந்தால் அதனை முறைப்படுத்த வேண்டும். மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை என்பது வரவேற்க தக்கது . இவர்களை நூறு நாள் வேலை திட்டத்தில் கண்காணிப்பாளராக பயண்படுத்திக்கொள்ளலாம்.

நீர்நிலைப் புறம்போக்குகளில் வசித்து வரும் ஏழை, எளிய மக்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தொடர்ந்து உத்தரவிட்டு வருகிறது. இதில் உள்ள யதார்த்தத் தை மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும். உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து, நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்கள் குறித்த புள்ளி விவரப் பட்டியல் எடுக்க வேண்டும்.

எந்த வகையிலும் நீர்நிலைக்கான வாய்ப்பில்லாத இடங்களில் வசிக்கும் ஏழை, எளியோரை அந்த இடத்திலேயே பட்டா வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும். நீர்நிலைக்கான வாய்ப்பு இருக்கும் இடங்களில் வசிப்போருக்கு வேறு மாற்று இடத்தில் வசிப்பிடம் அமைத்துத் தர வேண்டும்.

இதேநிலைதான் கோவில்நிலங்களில் குடியிருப்போருக்கும். தற்போது அரசு அமைத்துள்ள குழுவில் குடியிருப்போர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும். ஏழை, எளியோர் செலுத்தும் வகையிலான கட்டணத்தைக் குறைக்க வேண்டும். சதுரஅடி அளவில் கட்டணம் விதிப்பதை ஏற்க முடியாது.

பொதுஇடங்களில் சூதாட்டம் நடத்துவது பல ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் வெளிப்படையாக அனைத்து சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இதனால், பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமலாக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். மதுக்கடைகளின் எண்ணிக்கைகளை படிப்படி யாக குறைக்க வேண்டும்.

இலங்கையில் ஆளும் அரசால் கடைபிடிக்கப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு கிலோ அரிசி ரூ. 300- க்கும், பிரட் பாக்கெட் ரூ.300-க்கும் விற்பனையாகிறது. இந்த நெருக்கடியான நிலையை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்.

இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடி இந்தியாவில் ஏற்படும்போது, அங்கு நடப்பதைப் போலவே மக்களும் வீதிக்கு வந்து போராடுவதையும் தவிர்க்க முடியாது.
இதே பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை. பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை போன்றவற்றின் விலையை இந்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், தேர்தல் நடைபெறும் நாட்களில் மட்டும் விலை ஏறவில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏறிக் கொண்டே இருக்கிறது கட்டுப்படுத்த முடியாத நிலை தொடர்வது  நாட்டுக்கு பேராபத்து என்றார் முத்தரசன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top