Close
செப்டம்பர் 19, 2024 11:08 மணி

தஞ்சையில் வீடில்லாதோருக்கு அடுக்குமாடிகுடியிருப்பில் வீடு: இ.கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர மாநாடு

தஞ்சை மாநகரில் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புவீடு வழங்க வேண்டுமென  இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாநகர 23 -ஆவது மாநாடு தஞ்சாவூர் கீழ ராஜவீதி பி.கிருஷ்ணமூர்த்தி நினைவரங்கில்  (15.4.2022) வீ.கலியமூர்த்தி, எம் பானுமதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மாவட்ட துணைச் செயலாளர் வீ. கல்யாண சுந்தரம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி. சந்திரகுமார், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஜி. கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர் .கே. செல்வகுமார், மாவட்ட குழு உறுப்பினர் வெ.சேவையா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் தஞ்சை மாநகரில் வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தும் நோக்கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வீடு இல்லாத அனைவருக்கும் வழங்க வேண்டும், தஞ்சை சாந்த பிள்ளை கேட் மேம்பாலம் நான்கு வழிச் சாலையாக மாற்றி அமைத்திட வேண்டும்.

தஞ்சையில் சட்டக்கல்லூரி அமைத்திட வேண்டும், திலகர் திடல் மார்க்கெட்டில் மின்வசதி குடிநீர் கழிவறை வசதி ஏற்படுத்திட வேண்டும், தமிழக ஆளுநர் நீட் தேர்வு ரத்து தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் , மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் கடத்துவது கண்டிக்கதக்கது.

அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான காண நடவடிக்கை துவங்கும் நிலையில் இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகர செயலாளராக ஆர். பிரபாகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநகர குழு உறுப்பினராக ஆர்.பி. முத்துக்குமரன், ஆர்.பத்மாவதி, கே.கல்யாணி, மருத்துவர் ச.சுதந்திர பாரதி, வெ.சேவையா, ஆர் கே செல்வகுமார், கே.அயூப் கான் , ஆர். செந்தில்நாதன், கே.மூர்த்தி கே.மாரிமுத்து, ஏ.ஆரோக்கியராஜ், ஏ.பிரவீன் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்தாக கட்சிக்கொடியினை மூத்த நிர்வாகிஆர். பக்கிரிசாமி ஏற்றிவைத்தார். ஆர். செந்தில்நாதன் வரவேற்றார். எம்.சங்கிலி  முத்து நன்றியுரை கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top