Close
நவம்பர் 22, 2024 1:31 மணி

விடுதலைப்போராட்டவீரர் தீரன்சின்னமலைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடிபழனிசாமி மரியாதை

ஈரோடு

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை உருவச்சிலைக்கு மரியாதை செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் எம்எல்ஏ செங்கோட்டையன் உள்ளிட்டோர்

அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தீரன் சின்னமலை சிலைக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், தமிழ்நாடு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவக்குமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, அரச்சலூர் பேரூராட்சி தலைவர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து திமுக ஈரோடு தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கழக நெசவாளர் அணி செயலாளர் ப. சச்சிதானந் தம், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திண்டல் குமாரசாமி, திண்டல் மணிராஜ், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சு. குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதிமுக சார்பில் எம்.பி கணேசமூர்த்தி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி  ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு இன்று ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டம் அ.தி.முக.சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு  முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ. கே .சி. கருப்பணன், எம்.எல்.ஏ,. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் பண்ணாரி, ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.கே. எஸ். தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம்   கூறியதாவது:-சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை 266-வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை விழா அரசு விழாவாக கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா மற்றும் தேர்தல் விதிமுறைகள் காரணமாக இந்த நிகழ்வில் பங்கு பெற இயலவில்லை. இந்த ஆண்டு கொரனோ வைரஸ் தொற்று இருந்தாலும், அரசு இன்று கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கி அதன் காரணமாக இன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலைக்கு ஜெயலலிதா அமைத்த ஓடாநிலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றோம் என்றார் அவர்.

ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார்,முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே. சி. பழனிசாமி, முன்னாள் அமைச்சர் பிசி ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ சிவசுப்ரமணி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, மாவட்ட தலைவர் சி சுப்பிரமணியம்,வக்கீல் பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் விநாயகமூர்த்தி உட்பட ஏராளமானோர் தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் தலைமையில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் டி சந்திரசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகதீஷ், மத்திய மாவட்ட துணை தலைவர் பிரபாகரன்.

 வட்டார தலைவர்கள் புவனேஷ், பேட்டை சுரேஷ், இளைஞர் காங்கிரஸ் பிரகாஷ், மாணிக்கம்பாளையம் மோகன், ஈரோடு பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top