புதுக்கோட்டை நகர அதிமுக செயலாளராக பாஸ்கர் மற்றும் சேட் என்ற அப்துல்ரஹ்மான் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடைபெற் று வருகிறது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு அதிமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாள ரும் முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏ-வுமான சி. விஜயபாஸ்கர் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் வீட்டுவசதி வாரிய தலைவருமான பி.கே. வைரமுத்து ஆகியோரின் தலைமையில் அதிமுக அலுவலகத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை நகர் பகுதிக்கு புதிய பொறுப்பாளர்களை தலைமை கழகம் நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி புதுக்கோட்டை அதிமுக நகர செயலாளர் பொறுப்பை வடக்கு மற்றும் தெற்காக பிரித்துள்ளது இதில் வடக்கு நகரக் கழகச் செயலாளராக பாஸ்கரையும் தெற்கு நகரக் கழகச் செயலாளராக நகர மன்ற உறுப்பினர் சேட் என்ற அப்துல் ரஹ்மானை நியமித்துள்ளது.
புதுக்கோட்டை நகராட்சியில் நாற்பத்தி இரண்டு வார்டுகளை கொண்ட புதுக்கோட்டை நகர பகுதிகளில் அதிமுக சார்பில் இரண்டு நகரக் கழகச் செயலாளர்கள் நியமித்துள்ளதால் கட்சி நிர்வாகிகளிடம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.