Close
நவம்பர் 21, 2024 2:35 மணி

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த மதிமுக ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டுமன புதுக்கோட்டை மாவட்ட மதிமுக வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மதிமுக மாவட்டசெயல்வீரர்கள் கூட்டம் 20.04.2022 அன்று புதுக்கோட்டைஎஸ்.வி.எஸ்   சீதையம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் புலவர்.அரங்க நெடுமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட  நகரச் செயலாளர் அரசி .ரெ.கருணாநிதி  வரவேற்புரையாற்றினார், பொருளாளர் மாத்தூர் எஸ்.கே .கலியமூர்த்தி முன்னிலை வகித்தார்   மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை  இரா.முருகன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்:
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1. பெட்ரோல் மற்றும் டீசல் விலையுர்வை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

2. குண்டாறு , காவிரி இணைப்பு திட்டத்தை உடனடியாக பணிகள் தொடங்க வேண்டும்.  மாவட்டத்தின் வறட்சி நிலையை போக்க வேண்டும்.

3.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் முறையிட்டு கருவேல மரங்களால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பை உறுதிபடுத்தியதின் பேரில் நாடு முழுவதும் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை உடனடியாக மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்.

4. புதுக்கோட்டை மாவட்டம் நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் தனி நாடாளுமன்ற தொகுதியாகும் இருந்த நிலையில் அது நீக்கப்பட்டு சுற்றுவட்டார 4 மாவட்டங்களை சார்ந்த நிலையில் உள்ள நிலையால் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் மாவட்ட மக்கள் முன்னேற்றம் பாதிக்கப்பட்டு உள்ளதால் முன்பு போல் மீண்டும் புதுக்கோட்டை மாவட்டம் தனி நாடாளுமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட வேண்டும்.

என மத்திய மாநில அரசு மாவட்ட மதிமுக வலியுறுத்துகிறது.
5. புதுக்கோட்டைநகரின் நுழைவு வாயில் கருவேப்பிலான் ரயில்வே கேட் மற்றும் நகரின்மைய்யப்பகுதியில் திருவப்பூர் ரயில்வே கேட் உள்ளது. இதன் தண்டவாளங்களைகடக்க மேம்பாலங்கள் அமைத்து நகரில் சீரான போக்குவரத்து அமைத்து தர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசருக்கு கோரிக்கை வைப்பது.

6. மதிமுக தலைமைக் கழக செயலாளர்.துரை வைகோ தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கட்சிக்  கொடிகள் ஏற்றும் வகையில்  மாவட்டம், ஒன்றிய  மற்றும் கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

7. வருகின்ற 04.06.2022 அன்று கரம்பக்குடி ஒன்றிய செயலாளர் க.சேதுமாதவன்  படத்திறப்புவிழாவுக்கு  புதுக்கோட்டை மாவட்டம், வெட்டன்விடுதிக்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர்.வைகோவுக்கு  சிறப்பான வரவேற்பு அளிப்பது

 8. புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அருகில் இயங்கிவந்த பழமைவாய்ந்த அரசு பொது மருத்துவமனை அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைந்து வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே பழைய அரசு பொது மருத்துவமனையை மீண்டும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் செயல்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுக்கோட்டை
மதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேகரிப்பு படிவங்கள் ஒன்றிய வாரியாக வழங்கப்பட்டது. கட்சி  வளர்ச்சிபணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நகர்புற உள்ளாட்சிதேர்தலில் வெற்றிபெற்ற கழக நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.ஏ .ஆரோக்கியசாமி, .சுப்பையா, லதா.கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கா.சி.சிற்றரசு,வழக்கறிஞர் இராஜாஆதிமூலம், பொறியாளர் இரா.பாண்டியன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர், மதி.பிரபு மாவட்ட மாணவர் அணி செயலாளர், மற்றும் ஒன்றியசெயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், விவசாய அணி அமைப்பாளர்கள், இலக்கிய அணி அமைப்பாளர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். பொருளாளர் மாத்தூர்எஸ்.கே .கலியமூர்த்தி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top