தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டுகட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இடைக்குழு செயலாளர்கள் கூட்டம் ( 23-4-2022) தஞ்சாவூர் கட்சி அலுவலக கூட்ட அரங்கில் பா.பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாளுக்குநாள் கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் உர விலை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கின்ற நிலையில் தூர்வாரும் பணியை அவசர, அவசரமாக செய்யாமல் உடனடியாக தூர்வாரும் பணியை துவக்க வேண்டும். சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இதில், தேசியக்குழு உறுப்பினர் ஜி.பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, துணைச்செயலாளர் வீ.கல்யாண சுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.திருஞானம், சி.பக்கிரிசாமி கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணன் , மாவட்ட பொருளாளர் த.பாலசுப்பிரமணியன்.
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சி.சந்திரகுமார், வீரமோகன், கோ.சக்திவேல், சீனி முருகையன், இடைக்குழு செயலாளர்கள் ஒரத்தநாடு வாசு இளையராஜா, பட்டுக்கோட்டை பூபேஷ்குப்தா.
பேராவூரணி ஆர்.பி.கருப்பையா, திருவோணம் பால்ராஜ், பட்டுக்கோட்டை நகரம ப. விஜயன், தஞ்சாவூர் மாநகரம் ஆர்.பிரபாகர், சேதுபாவாசத்திரம் எஸ்தர்லீமா,தஞ்சாவூர் பி.கணேசன், ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.