Close
நவம்பர் 22, 2024 6:04 காலை

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன மசோதா: காங்கிரஸ் எம்பி வரவேற்பு

சிவகங்கை

சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம்

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்க அதிகாரம் என்ற சட்ட மசோதாவை நான் வரவேற்பதாக சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் துணை பத்திரப்பதிவாளர் அலுவலகத்தை திறந்துவைத்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்த போது மேலும் கூறியதாவது:
ஆளுநரின் தன்னிச்சை போக்கை தடுக்கும் விதமாகவே தமிழக சட்டமன்றத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
இந்தியா கொடுக்கும் நிதி உதவியை இலங்கை தன்னிச் சையாக செலவழிக்க கூடாது அதற்கென இந்தியாவிலிருந்து மூன்று அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
காவல் நிலைய துன்புறுத்தல் மரணங்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் காவல்துறை துன்புறுத்தலால் மரணம் அடைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது .அந்த வழக்கை விசாரணை செய்து குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார் கார்த்திசிதம்பரம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top