Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

புதுக்கோட்டை நகராட்சியில் 13 ஆழ்துளை கிணறுகள்: திமுக எம்பி தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை தொடக்கி வைத்த மாநிலங்களவை திமுக எம்பி அப்துல்லா.

புதுக்கோட்டை நகராட்சியில் 13 இடங்களில் ஆள்துளை கிணறு அமைக்கும் பணியை  மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் கடந்த பத்து வருடங்களாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான  தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

மேலும் வீடுகளில் குடி நீரை தவிர்த்து மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு தண்ணீர் தட்டுப்பாடு நீடித்து வந்தது.  இந் நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவை எம்பி ஆக தேர்வு செய்யப்பட்ட எம். எம். அப்துல்லா, புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள 42 வார்டுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை பெற்று அதற்கான நடவடிக்கைகளை அவருடைய எம்பி தொகுதி நிதியிலிருந்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை 1-ஆவது வார்டு மற்றும் 2-ஆவது வார்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆள்துளை கிணறு அமைக்கும் பணியினை திமுக மாநிலங்களவை எம்பி  அப்துல்லா கலந்து கொண்டு  தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை நகராட்சித் தலைவர் திலகவதி செந்தில், நகராட்சி துணைத்தலைவர் லியாகத் அலி, நகரக் கழகச் செயலாளர்  க. நைனாமுகமது, மாவட்ட பொருளாளர் ஆ.செந்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மதியழகன், பழனிவேல் மற்றும் ஒப்பந்தகாரர் ராம்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top