Close
செப்டம்பர் 19, 2024 7:05 மணி

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணிமன்றம் சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த திமுக எம்பி அப்துல்லா

புதுக்கோட்டையில்  திமுக இளைஞரணி செயலர் உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி  சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை  மாநிலங்களவை  திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அக்னி நட்சத்திரம் வெயில் துவங்கி விட்டதால் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதத்தில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர்பந்தல் திறக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி புதுக்கோட்டையில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பந்தலில் தர்பூசணி நீர் மோர், சர்பத் உள்ளிட்ட பல்வேறு வகையான பானங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக  புதுக்கோட்டை பால் பண்ணை ரவுண்டானா அருகே உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்வு  சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாநிலங்க ளவை எம்பி. அப்துல்லா கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து சிறுவர் கள் மற்றும் பெரியவர்களுக்கு வெயிலின் தாக்கத்த தணித்துக் கொள்ள உதவும் வகையில் குச்சி ஐஸ் வழங்கினார்.

 கோடைகால தண்ணீர் பந்தலில் நீர்மோர் சர்பத் தர்ப்பூசணி பழங்கள் வழங்கி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் சார்பில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு குச்சி ஐஸ் வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பேருந்தில் சென்ற பொதுமக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் சார்பில் குச்சி ஐஸ் இலவசமாக வழங்கியது பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு பேருந்தில் சென்றனர்.

இந்த நிகழ்வில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை. தமிழ்ராஜா, புதுக்கோட்டை மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் ஆலயம் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top