நம்பியூர் பேரூராட்சி 7 மற்றும் 12 -ஆவது வார்டு 70 நபர்களுக்கு வில்லையில்லா கேஸ் சிலிண்டர் வழங்கும் விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மற்றும் 12 -ஆவது வார்டு பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு விலையில்லா கேஸ் சிலிண்டர் வழங்கும் விழா நம்பியூர் பெருமாள் கோவில் திடலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நம்பியூர் பேரூராட்சி 7 -ஆவது வார்டு உறுப்பினரும் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளருமான தம்பி சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி,நம்பியூர் பேரூராட்சி அதிமுக செயலாளர் கருப்பணன், எலத்தூர் பேரூராட்சி அதிமுக செயலாளர் சேரன் சரவணன்,நம்பியூர் ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கோபி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு 70 பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் முன்னாள் எம்.பி சத்யபாமா, வழக்கறிஞர் கங்காதரன், நம்பியூர் பேருராட்சி 12 -ஆவது வார்டு உறுப்பினர் சரவணன், மாரிமுத்து, மணிகண்டமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கேஸ் சிலிண்டர் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் வழங்கிய போது எடுத்த படம் அருகில் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் உள்ளனர்.