Close
செப்டம்பர் 19, 2024 11:04 மணி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: முதலமைச்சருக்கு கலைஇலக்கிய பெருமன்றம் பாராட்டு

கலை இலக்கிய பெறுமன்றம்

தஞ்சையில் நடைபெற்ற கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட மாநாடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தஞ்சை மாவட்ட மாநாட்டில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தஞ்சை மாவட்ட மாநாடு பாப்பாநாட்டில் தலைவர் சி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி கோ.ஆனந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கல்வியாளர் இரா.கல்யாணசுந்தரம் தொடக்கவுரை நிகழ்த்தினார் . கலை இலக்கியப் பெருமன்றத்தின் வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் முனைவர் அய்யாறு ச.புகழேந்தி வாசித்தார். வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் சு.பாலதண்டாயுதம் சமர்ப்பித்தார்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவராக சி.ராமலிங்கம், துணைத் தலைவராக முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளராக முனைவர் அய்யாறு ச. புகழேந்தி, துணைச் செயலாளராக கவிஞர் வல்லம் தாஜ்பால், மாவட்ட பொருளாளராக சுபாலதண்டாயுதம் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட மாநாட்டை வாழ்த்தி மருத்துவர்கள் சி.செல்லப்பன், இரா.இளங்கோவன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பாஸ்கரன், இராபிரகாசம் ஆகியோர் பேசினார்கள் . நிறைவாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு சிறப்புரையாற்றினார்.

தீர்மானங்கள்: மாநாட்டில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற மகத்தான திட்டத்தினை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது.

அரசுப் பள்ளி மாணவர்களிடம் அதிகமாக பெருகி வரும் ஒழுங்கீன நடத்தை செயல்களை கண்டறிந்து , மாற்றாக அவர்களை பண்படுத்த கலை இலக்கியங்கள் மூலம் நெறிப்படுத்த அரசு முன் வரவேண்டும் என்பன உள்ளிட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top