Close
செப்டம்பர் 19, 2024 11:20 மணி

காவல்துறையைக் கண்டித்து தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

காவல்துறையைக்கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை காவல்துறையை  கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல் சரக எல்லைக்கு உட்பட்ட அருந்தவபுரம் சாலியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் மீது கடந்த மே மாதம் 7 -ஆம் தேதி அதே ஊரைச் சேர்ந்த நபர் புகார் கொடுத்ததன் அடிப்படை யில் எந்தவித விசாரணையும் செய்யாமல் மே மாதம் 17-ஆம் தேதி வழக்கு பதிவு செய்து அம்மாபேட்டை காவல் துறை சிறையில் அடைத்துள்ளனர்.

இதுசம்பந்தமாக அவரது மனைவி மஞ்சுளா காவல் நிலையத் தில் எனது கணவர் எந்தவிதமான தவறும் செய்ய வில்லை என்றும் கூறியும் காவல்துறை இதை கருத்தில் கொள்ளாமல் பொய்யான வழக்கை பதிவு செய்துள்ள   நடவடிக்கையை கண்டித்தும்,  உடனடியாக சம்பந்தப்பட்ட அம்மாபேட்டை காவல் துறை அதிகாரி மீது உரிய நடவடிக் கை எடுக்க கோரியும்  தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை  சரவணன் மனைவி மஞ்சுளா கோரிக்கை மனுவை வழங்கினார்.

உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில்குமார் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். எஸ்.பாலு,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.எம். குருமூர்த்தி, பி.தாமரைச்செல்வி, கே.ராஜாராமன், எம். வெங்கடேசன், அருந்தவபுரம் கிளை நிர்வாகிகள் ஜி. காமாட்சி, எஸ்.லதா, கே.சாந்தி உள்பட நூற்றுக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top