Close
செப்டம்பர் 19, 2024 6:56 மணி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு தஞ்சையில் நினைவேந்தல்

தஞ்சாவூர்

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் பலியானவர்களுக்கு இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூர் ரயிலடி முன்பு  நடைபெற்றது.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையின் ஆலையில் சுகாதார சீர்கேட்டால் தூத்துக்குடி நகரம் முழுவதும் சுற்றுவட்டார கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் புதிய வகையான தோல் வியாதிகள் கருவுற்ற மகளிர் குழந்தை வளர்ச்சி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால்  சேதமடைந்த தூத்துக்குடி நகர மக்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் அணிவகுப்பில் 99 நாட்கள் அமைதியாக போராட்டங்கள் நடைபெற்றது.  100-ஆவது நாள் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி  அறிவிக்கப்பட்ட பேரணிக்கு  தடை விதிக்கப்பட்டது.

கூட்டத்தை கட்டுப்படுத்த இதுவரை தமிழ்நாட்டில் கேள்விப்படாத புதிய அதிநவீன தொழில்நுட்ப ஸ்னைப்பர் டீம் காவல்படையை களத்தில் இறக்கி  துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஏறத்தாழ பதிமூன்று பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்த னர். இதற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று பின்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத் தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூர் ரயிலடி முன்பு  நடைபெற்றது.

தமிழர் தேசிய முன்னணி தேர்தல் பணிக்குழு உறுப்பினர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார். இடதுசாரி கள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் முன்னிலை வகித்தார். நினைவேந்தல் நிகழ்ச்சியில் சுற்றுச் சூழலை பாதித்துள்ள, மக்களைப் பெரிதும் பாதித்த நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் .

எந்த ஒரு வழியிலும் ஆலைக்கு அனுமதி அளிக்கக்கூடாது, துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதற்கு காரணமான அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும்.

விசாரணையை துரிதப்படுத்த வேண்டும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும்  உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் இயற்கை வளத்திற்கு கேடு விளைவிக்கின்ற, மக்களுக்கு புதிய வகை நோய்களை உருவாக்குகின்ற சுற்றுச் சூழலை, பாதிக்கின்ற எந்த ஒரு திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. முன்னதாக தியாகிகளின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் என்.பாலசுப் பிரமணியன், மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.செந்தில்குமார், மாநகர செயலாளர் எம்.வடிவேலன், தெருவியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்கும ரன், அரசு போக்குவரத்து சங்க செயலாளர் டி.கஸ்தூரி, சமூக ஆர்வலர்கள் விசிறி சாமியார் முருகன்,மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top