Close
நவம்பர் 22, 2024 12:28 காலை

பெட்ரோல்-டீஸல் விலை குறைப்பு: பாஜக வரவேற்பு

புதுக்கோட்டை

பாஜக முற்றுகைப் போராட்டம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை பெட்ரோல் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் விலை குறைப்பு அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பை அறிவித்த பாரத பிரதமர் மோடி,  நீதியமைச்சர் அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் திமுக அரசு பெட்ரோல் – டீசல் எரிவாயு விலையை குறைப்பது என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்து திமுக ஆட்சிக்கு வந்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் விலையை ரூபாய் 5 டீசல் விலையை 4 ரூபாய் , சமையல் எரிவாயு விலை ரூபாய் 100  எனவும் குறைக்க வேண்டும்.

இல்லையென்றால் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  அறிவித்துள்ளதை கண்டு தமிழக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு உதவி செய்பவராக உத்தமராக பேச மட்டும் தெரியும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் ஊட்டிக்குச் சென்று நடனமாட நேரம் இருக்கிறது.

பாரத பிரதமரின் அக்கறையில் 5% கூட இல்லாத தமிழக முதல்வரை எச்சரிக்கிறோம். தமிழக நிதி அமைச்சரின் புள்ளிவிவரங்கள் எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு தெரியாது வாக்கு வங்கியை தேடிப்போய் கொட்டித்தீர்த்த முதல்வருக்கு விலை மதிப்பை ரத்து செய்திட ஏன் தயக்கம். சிலரை சில காலம் ஏமாற்றலாம்.

பலரை பல காலம் ஏமாற்றலாம் எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது. மத்திய அரசு எந்த தேர்தல் வாக்குறுதி கொடுக்காமல் தீபாவளி பரிசாக நவம்பர் 3-ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாய், டீசலுக்கு பத்து ரூபாயும் குறைத்தது. ஆனால் தமிழக அரசு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை குறைக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டனத்துக்குரியது.

முதலமைச்சர் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும் குறைந்த பட்சம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை குறைப்பை சரி செய்யாவிடில் 72 மணி நேரம் கழித்து கோட்டையை பாஜக முற்றுகையிடும் இவ்வாறு கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top