Close
செப்டம்பர் 20, 2024 5:34 காலை

பொன்னமராவதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா

பொன்னமராவதி

பொன்னமராவதியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா

பொன்னமராவதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் விழாகொண்டாடப்பட்டது.

பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி மற்றும் நகர செயலாளர் அழகப்பன் ஆகியோர் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு கட்சி கொடியேற்றி வைக்கப்பட்டது .

அங்கு திரண்டிருந்த கட்சி தொண்டர்களுக்கும் பொதுமக்க ளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதேபோல் பொன்னமராவதி அரசு போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனையில் தொமுச சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில்  ஒன்றியச் செயலாளர் அடைக்கலமணி தலைமையில்  தொமுச கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வி பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன், நகர கவுன்சிலர்கள் ,ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, ஊராட்சி , கிளை கழக திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top