புதுக்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை(ஜூன் 7) வருகை தரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை வரவேற்க கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டு வர வேண்டுமென மதிமுக மாவட்ட பொருளாளர் எஸ். கே. கலியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அரசியல் வாழ்வில் பொன்விழா கண்ட தமிழக அரசியல் தலைவர், தமிழக மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமிழ்மொழி தமிழ் இனம் தமிழ் மண் ஆகிய உரிமைகளை காப்பாற்றி இன்றும் போராடி களம் கண்டு கொண்டிருக்கும் நமது மக்கள் தலைவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி (7.6.2022) அன்று புதுக்கோட்டைக்கு வருகை தருகிறார்
தலைவருக்கு புதுக்கோட்டை மாவட்ட தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக ஒன்றுகூடி சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
மாவட்ட நிர்வாகிகள் நகர செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர்கள் கழகத் தோழர்கள் 07 06 2022 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு புதுக்கோட்டை திருக்கோகர்ணம் மியூசியம் பேருந்து நிறுத்தப்பகுதியில் அனைவரும் திரண்டு வருகை தர கேட்டுக் கொள்கிறேன்.
அன்று மாலை 5 மணிக்கு வெட்டன் விடுதியில் உள்ள அய்யா திருமண மண்டபத்தில் காலம் சென்ற கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் க .சேதுமாதவன் உருவப்படம் வைகோ எம் பி திறந்து வைக்கிறார். அந்த நிகழ்விலும் மாவட்ட நிர்வாகிகள் நகர செயலாளர்கள் ஒன்றியசெயலாளர்கள் பேரூர் கழக செயலாளர்கள் கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்க திரண்டு வருமாறு மறுமலர்ச்சி திமுக மாவட்ட பொருளாளர் எஸ்.கே.கலியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்