Close
நவம்பர் 22, 2024 6:30 காலை

மொடக்குறிச்சியில் பாஜகவினரின் வாகனப் பேரணிக்கு தடைவிதித்த போலீஸாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு

மொடக்குறிச்சியில் போலீஸாரைக் கண்டித்து எம்எல்ஏ சரஸ்வதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனையை விளக்கி பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்த  இருசக்கர வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில்,தடையை மீறி பாஜகவினர் முயற்சித்ததால் மொடக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில்   பிரதமர் மோடியின்  எட்டாம் ஆண்டு  சாதனையை விளக்கும் வகையில்  பாஜக மாவட்ட இளைஞரணி சார்பில் இளைஞர் அணி மாவட்டத் தலைவர் தலைமையில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் பாஜகவினர் இருசக்கர வாகனப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பேரணியை மொடக்குறிச்சி பகுதியில் இருந்து ஊர்வலமாக இருசக்கர வாகனம் மூலம் சோலார் ஈரோடு வழியாக திண்டல் முருகன் கோவில் அடிவாரத்தில்  இப்பேரணியை நிறைவு செய்ய பாஜகவினர் திட்டமிட்டிருந்தனர்.  இதற்காக மொடக்குறிச்சி போலீசாரிடம்  அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் இரு சக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து தடையை மீறி இருசக்கர வாகன பேரணி செல்ல பாஜகவினர்  முடிவு செய்தனர்.

இதனை அறிந்த மொடக்குறிச்சி போலீசார் பேரணி செல்ல இருந்த பாஜக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மொடக்குறிச்சி கரிய காளியம்மன் கோவிலில் இருந்து இருசக்கர வாகன பேரணியை மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தார்.
இருசக்கர வாகன பேரணி  மொடக்குறிச்சி நால்ரோடு அருகே வந்தடைந்தது.

இதனையடுத்து மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் பேரிகார்டு அமைத்து பாஜகவினரின் இருசக்கர வாகன பேரணியை தடுத்து நிறுத்தினர் நிலைமை கட்டுக்குள் மீற அதிவிரைவு போலீசார் குவிக்கப்பட்டனர். தகவலறிந்தத ஈரோடு டவுன் போலீஸ் டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் பாஜக வின்  வாகனப் பேரணியை முடக்கி வைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த  பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம் போலீசாருக்கு அஞ்சமாட்டோம் தமிழக அரசே தமிழக அரசே எங்களை அடக்கி ஆள நினைக்காதே என கோஷமிட்டனர்.

இதனால் மொடக்குறிச்சி நால்ரோட்டில் பரபரப்பு நிலவியது பாஜக வின் வாகன பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதால்  மொடக்குறிச்சி நால்ரோட்டில் ஈரோடு முத்தூர் சாலையில் காலையில்  10.30 மணியிலிருந்து சுமார்  1 மணி  நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீஸ் டிஎஸ்பி நடத்திய பேச்சு வார்த்தைக்குப்பின்னர் பாஜகவினர் வாகன பேரணியை கைவிட்டு  கலைந்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top