Close
செப்டம்பர் 19, 2024 11:22 மணி

புதுக்கோட்டைக்கு வந்த மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டைக்கு வந்த வைகோவுக்கு வரவேற்பளித்த கட்சி நிர்வாகிகள்

புதுக்கோட்டையில்  மறுமலர்ச்சிதிமுக பொதுச்செயலாளர் வைகோ விற்கு  நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்                                                                                                            புதுக்கோட்டை திருக்கோகர்ணம் மியூசியம் அருகில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினர்  வைகோ வுக்கு    மதிமுக மாவட்ட பொருளாளர் மாத்தூர் எஸ். கே. கலியமூர்த்தி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 500 க்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டு மாபெரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர் .

புதிய   பேருந்து நிலையம் வழியாக  தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், நகரச் செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்கள், பொதுகுழு உறுப்பினர்கள், மாவ‌ட்ட இளைஞர் அணி செயலாளர்கள் , மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இரு சக்கர வாகன பேரணியாக ஊர்வலமாக     மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோவை அழைத்து  சென்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top