வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை குறைக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை ஒன்றிய 6-ஆவது ஒன்றிய மாநாடு புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார்.
மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்டத் தலைவர் பி.சுசீலா பேசினார். ஒன்றியச் செயலாளர் ஆர்.சுபாஷினி வேலை அறிக்கை வாசித்தார்.
பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் தலைவராக அமுதா, செயலாளராக சுபாஷினி, பொருளாளராக முத்துலெட்சுமி உள்ளிட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் டி.சலோமி நிறைவுரையாற்றினார்.
தீர்மானங்கள்:வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை குறைக்க வேண்டும். நூறுநாள் வேலையில் ஆன்லைன் பதிவை ரத்துசெய்ய வேண்டும்.
உரையநேரி காலனி மக்களுக்கு குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.