Close
செப்டம்பர் 20, 2024 1:31 காலை

புதுக்கோட்டையில் காமராஜரின் 119 -வது பிறந்தநாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டையில் காமராஜரின் 119 -வது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்விக்கண் தந்த கர்ம வீரர் முன்னாள் முதல்வர் காமராஜரின் 119-ஆவது பிறந்த நாள் விழா புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில்  கொண்டாடப்பட்டது.

கட்சி அலுவலகத்தில் நகரத்தலைவர் ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் நகர்மன்றத்தலைவர் துரைதிவியநாதன், நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகமது, நிர்வாகிகள் எம்.ஏ.எம். தீன், ஜி.எஸ். தனபதி, செம்பைமணி, சரவணன், வீரதுரைசிங்கம், சூர்யாபழனியப்பன், ஜெய்சங்கர், கருணாநிதி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு காமராஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையொட்டி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ள காமராஜர் உருவச்சிலைக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top