Close
நவம்பர் 22, 2024 11:08 காலை

திமுக அரசைக்கண்டித்து கோபியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

கோபிச்செட்டி பாளையத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையான் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வை உடனே வாபஸ் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் கோபிச்செட்டிபாளையத் தில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,  கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர், கோபி தொகுதி எம்எல்ஏ செங்கோட்டையன்  தலைமை வகித்து பேசியதாவது:

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மனிதாபிமானமிக்க தலைவர்கள். அவர்களது ஆட்சியில் தான் ஏழைகளின் கண்ணீர் துடைக்கப் பட்டது. சத்துணவு, இலவச மிதிவண்டி, தொட்டில் குழந்தை, 25 கிலோ இலவச அரிசி, பொங்கல் பரிசு புத்தாடைகள் வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் அவர்கள் ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது

இன்று அவர்களது வழியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அனைத்து தொண்டர்கள் ஆதரவுடன் ஒற்றை தலைமையின் கீழ் வலிமையோடு செயல்படுகிறது கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை ஆகும்.

ஈரோடு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும். விலைவாசி உயர்வால்  கடுமையாக  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு மின் கட்டணம், வீட்டுவரி, குடிநீர், கழிவுநீர் கட்டண வரிகளை கடுமையாக உயர்த்தி உள்ளது.

பொதுமக்கள் மீது சுமை ஏற்றப்பட்டுள்ளது இதை கண்டித்தும் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் உட்பட அனைத்து கட்டணங் களையும் வாபஸ் பெறக் கோரி  இந்த மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது என்றார் கே.ஏ. செங்கோட்டையன்.

இதில், முன்னாள் எம்பி சத்யபாமா,நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ,நகர செயலாளர் பிரினியோ கணேஷ், வழக்கறிஞர்  மவுலீஸ்வரன்,கவுன்சிலர் முத்துரமணன்,எம்ஜிஆர் மன்றம் அருள்ராமசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top