Close
நவம்பர் 22, 2024 12:00 காலை

சோனியா- ராகுல் ஆகியோரை கலங்கப்படுத்த நினைக்கும் அமலாக்கத்துறையைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிஸார் உண்ணாநிலை போராட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டம்

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிஸ் தலைவர் வி. முருகேசன், தெற்கு மாவட்டத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ- ராமசுப்புராம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று மீண்டும் ஆஜராக உள்ளார். சோனியா காந்தியிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

வழக்கின் பின்னணி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிகை. நாடு விடுதலைக்கு முன்னரே அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நேரு தொடங்கி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்புடன் இந்த பத்திரிகையை நேரு தொடங்கினார். இப்பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி நிதி வழங்கிய பங்கு பரிமாற்றம் வழக்கு 2010-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.

அதன் பங்குதாரர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. அப்போது அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டது. இக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவனப் பங்குகள் சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ஏற்கெனவே வருமான வரி துறை வழக்குப் பதிவு செய்து அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

ராகுலிடம் விசாரணை இந்நிலையில் இந்த பங்குகள் பரிமாற்றத்தில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவரிடம் விசாரணை நடத்த  அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. ராகுல் காந்தியிடம் ஏற்கெனவே பல மணிநேரம் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. அந்த விசாரணைக்கு எதிராக தில்லி மற்றும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர்.

சோனியா காந்தி சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக ஆஜராகினார். அவரிடம் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் வெளியேயும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சோனியாவிடம் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக,  புதுக்கோட்டையில் நடந்த உண்ணாநிலை போராட்டத்தில், நிர்வாகிகள் துரை திவியநாதன்,  ஆரோக்கியசாமி, பென்னட்அந்தோணிராஜ்,  மா.தமிழ்ச்செல்வன், அரிமளம் முகமதுஇப்ராஹிம், வீரதமிழ்ச்செல்வன் மற்றும் வடக்கு, தெற்கு மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top