Close
நவம்பர் 22, 2024 1:13 மணி

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின பவளவிழா பாதயாத்திரை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வல்லத்திரா கோட்டையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சுதந்திரதின பவள விழா பேரணி

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  சோனியா காந்தி இளந்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் அறிவிப்பின் பேரிலும்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
கே. எஸ். அழகிரி  அறிவிப்புக்கிணங்க, சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் தியாகம் குறித்தும், ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையும் மக்களுக்கு எடுத்துரைக்கின்ற வகையில் பாதயாத்திரையை காந்திய வழியில் நடத்திட வேண்டும் என்ற எண்ணத்திலும் அண்ணல் மகாத்மா காந்தி  தியாகத்தையும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றி நினைவு கூறுகின்ற வகையில் ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை  பாத யாத்திரை நடத்தப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகள் சார்பில் பவள விழா பாதயாத்திரை நடைபெற்றது.

இதில், ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட வல்லத்திராகோட்டை யில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராம.சுப்புராம் தலைமையில் நடைபெற்ற பவள விழா பேரணியை திருச்சி முன்னாள் மேயரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரு மான எஸ். சுஜாதா தொடக்கி வைத்தார்.

வல்லத்திராகோட்டையில் தொடங்கி வேங்கிடகுளம் ,கிருஷ்ணாபுரம் ,மாங்காடு, குப்பக்குடி கல்யாணபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக ஆலங்குடியில் 14 ஆம் தேதி நிறைவு பெறுகிறது .

இந்த பாதயாத்திரையில்  மா. தமிழ்ச்செல்வன் , வட்டார தலைவர்கள் ஐயப்பன், பன்னீர்செல்வம் ,தனராஜ் , நகரத் தலைவர் எம். எஸ். அரங்குளவன், மற்றும் நிர்வாகிகள் கண்ணன், ஜெயபால், பாண்டியராஜன், மனோஜ், சிவா, திருமயம் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். கணேசன், உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top