புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி சின்னப்பா பூங்காவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை அரசு தொடர்பு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் வெத்தலை, பாக்கு, சந்தனம், குங்குமம் உள்ளிட்டவைகளை தாம்பாளத்தில் வைத்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியின் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கோவிந்தசாமி, ரமேஷ், செல்லத்துரை, திருமேனி சுந்தரம், தண்டாயுதம், இளங்கோ, மனோகர், பாலகிருஷ்ணன், செந்தில்நாதன், வடிவேல், சூர்யா, ஜெயராமகிருஷ்ணன், முத்துக்குமார், குமரேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்