Close
செப்டம்பர் 20, 2024 1:22 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில்  வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள்: கண்காணிப்பு அலுவலருடன் ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில்  வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர் வள்ளலார் தலைமையில் ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் நடந்த ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார்,  தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு   முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2023-இன் கீழ் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார் தலைமை யில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  முன்னிலையில்  (12.11.2022) மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

01.01.2023 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2023-ஆம் ஆண்டில் 18வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும் வாக்காளர்களின் பெயர், முகவரி, மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யப்படுகிறது.

இதற்கான  படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நிமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 09.11.2022 முதல் 08.12.2022 வரை பெற்று அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிட இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2023-இன் கீழ் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தற்போது 18-வயது பூர்த்தியடைந்த அனைவரையும் 100 சதவீதம் விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் எனவும், வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல் முகாம் நடைபெறுவதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் விளம்பரங்கள் மூலம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகளை விரைவுப்படுத்தவும் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர்எம்.வள்ளலார் அறிவுறுத்தினார்.

மேலும், வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கான விண்ணப்பப் படிவங்களானது (படிவம் 6, 6பி, 7 மற்றும் 8) அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தினங்களில் வாக்காளர்களுக்கு வழங்கிட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்குளை தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்  அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கோட்டாட்சியர்கள் .எஸ்.முருகேசன் (புதுக்கோட்டை), திரு.குழந்தைசாமி (இலுப்பூர்) சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், தேர்தல் வட்டாட்சியர் கலைமணி மற்றும் வட்டாட்சியர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top