Close
செப்டம்பர் 20, 2024 12:43 காலை

வாக்காளர்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவது அதிமுக, திமுக கட்சிகளின் முக்கிய பணி: நாம் தமிழர் சீமான்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை அறிமுகம் செய்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேராமல் ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது .

அதன்படி இடைதேர்தலையொட்டி ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்  கலந்து கொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும்.

ஈரோடு

தொகுதி மகளிர் பாசறை இணைச் செயலாளராக உள்ள மேனகா நவநீதன் –ஐ அறிமுகம் செய்து அறிவித்தார்.

பின்னர் சீமான் கூறியதாவது: இலவசம் கொடுத்து எல்லோரையும் மேலும் மேலும் ஏழைகளாகவே வைத்திருக்கிற அரசியல் கட்சிகளுக்கு பாடம் புகட்டவே நாம் தமிழர் கட்சி இத்த தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்து வேட்பாளர் நிறுத்தியுள்ளது. வேட்பாளர்கள்  அரசியலில்  ஆதாயம் பெறுவதற்காகவே ரூபாய் 500 , ரூபாய் 1000 என வாக்குகளுக்கு பணம்  கொடுக்கிறார்கள் என்பதை உணராமல் பணம் பெறுவது   அவர்களது கெட்ட நோக்கத்தை ஏழை எளிய மக்கள் வரவேற்பதாகவே அமையும்.

தமிழகத்தின் மக்களுக்கு ஒரு தேடல் ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது என்பது ஒரு மாயை. ஈரோடு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பது என்பது, வாக்காளர்களுக்கு பணத்தை தந்து வாக்காளர்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவது அதிமுக, திமுக உள்ளிட்ட ஆண்ட கட்சிகளுக்கு முக்கியப் பணியாக இருக்கிறது. முதலாளிகளுக்கு  சாதகமாக கட்டமைக்கப்பட்ட  மத்திய அரசின் கொள்கைகள்  போன்ற உண்மைகளை மக்களிடம் சொல்லி  நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரிப்போம்

கடந்த முறை 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டதைப்போல இல்லாமல் இந்த இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 12 நாட்களுக்கு மேலாக தொகுதியில் தங்கி பிரசாரம் மேற்கொள்வேன். செந்தில்பாலாஜிக்கு மத்திய அரசு  கொடுத்த அழுத்தம் தான் மின் கட்டணம் உயர்வுக்கு காரணம். எரிவாயு சிலிண்டர், மின்கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

இது போன்ற பிரச்னைகளுக்கு நாம் தமிழர் கட்சி கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே தீர்வு காண முடியும் .பெருந்துறை சந்தையில் தமிழர்கள் முழுமையாக இருந்த நிலை மாறி வட இந்தியர்களே அதிகம் உள்ளனர்  இந்த நிலைக்கு  தமிழகத்தை  ஆண்ட கட்சிகள் செய்த துரோகம்தான் காரணம் .

பான்மசாலா அனுமதி என்பதற்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் முடிவு என்பது அதிமுக அல்லது திமுகவுக்கு மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கிடைப்பார்கள் தவிர மக்கள் பிரச்னை தீராது. நாம் தமிழர் கட்சியை பதவிக்கு வந்தால் மட்டுமே மக்கள் பிரச்னை தீரும். தமிழகத்தை பொருத்தமட்டில் பணம் இருப்பவர்களால் மட்டுமே அரசியலில் இருக்க முடியும் என்கிற நிலைப்பாட்டை மாற்றும் முடிவு மக்களிடம்தான் உள்ளது .

தேர்தல் ஆணையம் தொழில் ரீதியாக பணம் கொண்டு வருகின்றவர்களை வழிமறித்து சோதனை என்கிற பெயரில் வேதனையை ஏற்படுத்துகிறது. உண்மையான தேர்தல் நடவடிக்கையை தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.  இது போன்ற இடைத்தேர்தலில் பணப்பரிமாற்றும் அதிகமாக நடப்பது வெளிப்படையாக தெரிந்த உண்மை அதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவது என்பது புதிய மாற்றத்திற்கான ஒரு ஆணிவேராக அமையும். திமுக குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக ஏமாற்றியது. நாம் தமிழர் கட்சியை பொருத்தமட்டில் மக்களுக்கு தூய மருத்துவம் அளிப்பதே முதல் நோக்கம்.

வானூர்தி நிலையம் வேண்டாம் என மக்கள் போராடுகின்றனர். ஏற்கெனவே  வானூர்தி நிலையத்தை வைத்துக்கொண்டு மீண்டும் ஒரு வானூர்தி நிலையம் அமைப்பது என்பது மக்களுக்கு வேதனை அளிக்கும் செயலாகும் .அத்திக்கடவு அவினாசி திட்டம் பாதியில் இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக மக்களை  மத்திய அரசு ஏமாற்றி விட்டது. ஒருவேளை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டால் அங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்தான் வேலைக்கு வருவார். தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் உண்மை என்றார் சீமான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top