ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதையும் மக்கள் வாக்குக்கு பணம் பெறுவதையும் தடுக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் ஈரோட்டில் பொதுமக்களிடையே வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
தமிழகத்திம் கடந்த பல இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் வெளிப்படையாக ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் இதற்கு முன்பும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.
தேர்தலில் ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்பும், கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. இந்தத் தேர்தலி லும் ஒட்டுக்கு பணம் பொருள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
வெளி மாநில காவல்துறை அதிகாரிகளையும், காவலர்களை யும் தேர்தல் ஆணையம் தேர்தல் கண்காணிப்பாளராகவும், பாதுகாப்பாளர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும்.
இதனையும் மீறி பணமும் பொருளும் வாக்குக்கு கொடுக்கப் பட்டால் பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தலை நிறுத்தி விட வேண்டும். நியாயமாக தேர்தல் நடக்கும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலை தள்ளி வைக்கலாம்.
இந்த ஈரோடு இடைத்தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்துகின்ற தேர்தலாக அமைய வேண்டும். எந்த அரசியல் இயக்கமும், ஓட்டுக்கு பணம் வழங்க இயலாத சூழலை ஏற்படுத்த வேண்டும். இதில் தேர்தல் ஆணையம் தீவிரமான நேர்மையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெ வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பன்னீர்செல்வம் பார்க் அருகில் வாகன விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.