புதுக்கோட்டை மாவட்டம் விவிபேட் இயந்திரங்களைமாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலை யில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரபெற்ற விவிபேட் இயந்திரங்களை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் இன்று (23.05.2023) பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடக மாநில பெங்க;ரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1,000 எண்ணிக்கையிலான விவிபேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி இன்று அனுப்பி வைக்கப்பட்ட விவிபேட் இயந்திரங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறை திறக்கப்பட்டு விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர்மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சோனை கருப்பையா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.