Close
நவம்பர் 22, 2024 4:58 காலை

கந்தர்வகோட்டை அருகே தேசிய வாக்காளர் தினம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியம் நத்த மாடிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் நத்த மாடிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு குறித்து வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தேசிய வாக்காளர் தினம்  குறித்து பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜனவரி 25 அன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் முதன்முதலில் 2011 இல் அனுசரிக்கப்பட்டது‌.

இந்த நாள் நாட்டின் வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது, வாக்காளர்களிடையே விழிப்புணர்வைப் பரப்புகிறது மற்றும் தேர்தல் செயல்பாட்டில் தகவலறிந்த பங்கேற்பை ஊக்குவிக்கிறது. 1950  -ஆம் ஆண்டு இதே நாளில், இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது.இந்த தினத்தை கொண்டாடுவதன் முக்கிய நோக்கம், முக்கியமாக புதிய வாக்காளர்களை சேர்ப்பதை ஊக்குவிக்கவும், எளிதாக்கவும் மற்றும் அதிகப்படுத்தவும் ஆகும்.

இந்த ஆண்டு, நாம் 14  -ஆவது தேசிய வாக்காளர் தினத்தை கொண்டாடுகிறோம் , அதன் கருப்பொருள் வாக்களிப்பதைப் போல எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிக்கிறேன்’. தேர்தல்களின் போது வாக்காளர்கள் சுறுசுறுப்பாக பங்கேற் பதை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முதன்மை நோக்கம் வாக்காளர் பதிவை, குறிப்பாக தகுதி வாய்ந்த வாக்காளர்களிடையே ஊக்குவிப்பதாகும். வாக்களிக்கும் வயது 21லிருந்து 1988 இல் அது 18 வயதாகக் குறைக்கப்பட்டது. இந்தியாவில் வாக்களிக் கும் வயது 1988 இன் அறுபத்தோராம் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்டது.

வாக்காளர்கள் தங்களின் வாக்கு எனும் மாபெரும் சக்தியால் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டை கட்டமைக்கின் றனர் என்றார் அவர்.

இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் மகமாயி, சரண்யா, சிவரஞ்சனி, அபினேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top