Close
ஜூலை 4, 2024 5:24 மணி

திருவண்ணாமலை தொகுதி நான்காவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் முன்னிலை

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை

திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் தபால் வாக்கு மற்றும் நான்காம் சுற்றும் முடிவில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் உள்ளன.

அதிமுக+தேமுதிக கூட்டணி சார்பில் கலியப்பெருமாள், திமுக+காங் கூட்டணியில் அண்ணாதுரை, பாஜக சார்பில் அஸ்வத்தாமன்,நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ் பாபு உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டு , இந்நிலையில் இன்று காலை சரியாக 8 மணிக்கு அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, தற்போது ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை முன்னிலையில் உள்ளார்.

தொடர்ந்து தற்போது நான்காம் சுற்று முடிவில்

திமுக வேட்பாளர் அண்ணாதுரை 1,61,458 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்..
அதிமுக வேட்பாளர் கலியப்பெருமாள் 86,856 ,வாக்குகள் பெற்றும்,
பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 47,648 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆரணி நாடாளுமன்ற தொகுதி

ஆரணி மக்களவைத் தொகுதியில் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளது. இதில் செஞ்சி, மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஆரணி தொகுதியில் எம்.எஸ்.தரணிவேந்தன்(திமுக). ஜி.வி.கஜேந்திரன்(அதிமுக), ஏ.கணேஷ்குமார்(பாமக), ஆகியோர் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று காலை சரியாக 8 மணிக்கு அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது,தற்போது நான்காம் சுற்று முடிவில் ,
திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 67,325 வாக்குகள் பெற்றும், அதிமுக வேட்பாளர்கஜேந்திரன் 40,736 , வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top