Close
நவம்பர் 21, 2024 7:05 மணி

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணாத் தேர்தல்களுக்கு வாக்குச் சாவடிகளில் பணியமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 31.01.2022 அன்று முதற்கட்ட பயிற்சியும், 09.02.2022 அன்று இரண்டாம் கட்ட பயிற்சியும் மற்றும் 18.02.2022 அன்று மூன்றாம் கட்ட பயிற்சியும் நடைபெறும் என கால அட்டவணையின்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 31.01.2022 அன்று முதற்கட்ட பயிற்சி வாக்குச் சாவடிகளில் பணியமர்த்தப்படும். வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சம்மந்தப்பட்ட மையங்களில் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், நிர்வாக காரணங்களை முன்னிட்டு 09.02.2022 அன்று நடத்தப்பட வேண்டிய இரண்டாம் கட்ட பயிற்சி 10.02.2022 (வியாழக்கிழமை) அன்று நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளதால், வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி 10.02.2022 அன்று சம்பந்தப்பட்ட மையங்களில் நடத்தப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top