Close
நவம்பர் 24, 2024 7:17 காலை

பறக்கும்படையினரின் கண்காணிப்பில் ஈரோடு வேட்பாளர்களின் பிரசாரம்

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பிரசாரம்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வேட்பாளர்கள் பிரசாரங்களை தீவிர கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகள் உள்ளது. இதில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 443 வாக்கு சாவடி மையங்களும், 4 நகராட்சிகளில் 153 வாக்குச்சாவடி மையங்கள், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்முறைகேடு களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புற தேர்தல் அட்டவணை வெளியான உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் 66 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு, பறக்கும் படையினர் சுழற்சி முறைகளில் பணியாற்றி வருகின்றனர். தற்போது வேட்பாளர்கள் வீடுவீடாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில்
பறக்கும் படையினர் தங்களது சோதனைகளை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மாநகராட்சியின் முக்கியமான பகுதிகள், மாவட்டம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். தாங்கள் மேற்கொள்ளும் சோதனை களை வீடியோவாகவும் பதிவு செய்து வருகின்றனர்.

ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணித்தனர். வேட்பாளர்களின் பிரசாரத்தையும் தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top