Close
நவம்பர் 21, 2024 11:35 மணி

புதுகை நகராட்சி 9 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் செந்தாமரை-எம்.எம்.பாலு தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 9 வது வார்டில் வீடு விடாக வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர் செந்தாமரைஎம்.எம்.பாலு

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின்  9 -ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு மனைவி  செந்தாமரை வீடு வீடாகச்சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  50 % இடங்களை மகளிருக்கு ஒதுக்கி தமிழக  அரசு ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்  நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் மகளிருக்கு  50 % இடங்களை  ஒதுக்கீடு செய்து தேர்தலை நடத்துகிறது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில் 2  இடங்களில்  போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்ட தைத் தவிர்த்து, 187 இடங்களுக்கு பிப்.19 -இல் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு  மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர்   போட்டியிடுகின்றனர். இதில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சி 9 -ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு மனைவி  செந்தாமரை தனது வார்டுக்குள்பட்ட பகுதிகளில் வீடு வீடாக  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகளும் தொண்டர்களும் இணைந்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top