Close
நவம்பர் 10, 2024 5:55 காலை

புதுகை நகராட்சி 27 வது வார்டில் சின்னம் சுமந்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர் மூர்த்தி

புதுக்கோட்டை

தனது தென்னங்கன்று சின்னத்துடன் வாக்கு சேகரித்த புதுகை நகராட்சியின் 27 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் கார்த்திக் மெஸ் மூர்த்தி

திமுக வட்ட பிரதிநிதியாக உள்ள  கார்த்திக் மெஸ் எஸ். மூர்த்திக்கு,  திமுக சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்புக் கிடைக்காததால் புதுக்கோட்டை நகராட்சியின்   27 -வது  வார்டில் சுயேச்சையாக களமிரங்கியுள்ள இவருக்கு தேர்தல் ஆணையத்தால் தென்னங்கன்று  சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள  கார்த்திக் மெஸ் மூர்த்தி,   தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னமான தென்னங்கன்றை கையில் சுமந்தபடி  வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சி உள்ள 42 வார்டுகளிலும் பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் வாக்காளர்களை கவர்வதற்காக அதிமுக திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்கள் உட்பட சுயேச்சை வேட்பாளர்களும் விதவிதமான நூதன முறையில் தங்கள் பிரசாரம்  செய்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்

இந்நிலையில் திமுக வட்ட பிரதிநிதியாக உள்ள மூர்த்தி திமுக சார்பில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்காததால் சுயேச்சையாக களத்தில் இறங்கியுள்ளார்.இந்த வார்டு காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

திமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால்  சுயேட்சையாக போட்டியிடும் கார்த்திக் மெஸ் மூர்த்தி தேர்தல் ஆணையத்தால் தனக்கு ஒதுக்கப்படட தென்னங்கன்று செடியை  எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து  வாக்காளர்களை ஈர்த்து வருகிறார்.

இதேபோன்று 16 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சேட்  பொதுமக்க ளுக்கு பாதாம்பால் போட்டுக்கொடுத்து நூதன முறையில் வாக்குகள் சேகரித்தார்

சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமல்லாது பிரதான கட்சிகள் வேட்பாளர்களும் வாக்காளர்களை கவர்வதற்காக புதுப்புது முயற்சிகளையும்  உத்திகளையும் கையாண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் புதுக்கோட்டை நகராட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top