நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின் 9 -ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு மனைவி செந்தாமரை வீடு வீடாகச்சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில் 187 இடங்களுக்கு பிப்.19 -இல் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சி 9 -ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு மனைவி செந்தாமரை தனது வார்டுக்குள்பட்ட வடக்கு 3 மற்றும் வடக்கு 4 ஆம் வீதிகள், செல்லப்பன் நகர், மாப்பிள்ளையார் குளம் உள்ளிச்ச பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார். இவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகளும் தொண்டர்களும் இணைந்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.