Close
நவம்பர் 10, 2024 5:41 காலை

புதுகை நகராட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை

புதுக்கோட்டை

புதுகை நகராட்சியில் நடந்த வேட்பாளர்களுடனான தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற வேட்பாளர்கள்

நகராட்சியில் உள்ள 42 வார்டுகளின் வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரம் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில்  வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக அதிமுக – திமுக இடையே வாக்குவாதம் நடந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கூட்டம் மற்றும் மின்னணு இயந்திரங்களுக்கு ரேண்டமைசேசன் எண்கள் பொருத்தப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் கூட்டம் தேர்தல் பார்வையாளர் சிவகுமார் தலைமையில், நகராட்சி ஆணையரும் தேர்தல் பொறுப்பாளருமான நாகராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள்

இதில் பங்கேற்ற வேட்பாளர்கள் பலரும் வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக  பிரச்னையை எழுப்பி  விவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அதிமுக நிர்வாகி 25 வார்டில் ஏற்கெனவே இருந்த 37  பேர் நீக்கப்பட்டு, யாரென்றே தெரியாத 63 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார் . அப்போது திமுக வேட்பாளர்கள் இந்த குளறுபடி அதிமுக ஆட்சியில் நடைபெற்றதாகவும், திமுக ஆட்சி நடைபெறவில்லை எனவும் விளக்கம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வேட்பாளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டதாக முறையாக மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் கூறினார்.  தொடர்ந்து திமுக வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்கள் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது தொடர்ந்து நகர காவல் ஆய்வாளர்  குருநாதன் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினார்
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top