Close
நவம்பர் 22, 2024 4:23 காலை

காணொலி மூலம் ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

ஈரோடு

முதல்வர் மு.க. ஸ்டாலின்

காணொலி காட்சி மூலம்  ஈரோடு மாவட்டத்தில் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை மேற்கொண்ட  பிரசார நிகழ்வை  பொதுமக்கள், வேட்பாளர்கள் பார்க்க வசதியாக 106 இடங்களில் டிஜிட்டல் திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தனது ஆதரவாளர் களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் தி.மு.க- அ.தி.மு.க இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்நிலை யில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்தோடு காணொலிக் காட்சி மூலமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி கடந்த 6ஆம் தேதி கோவையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து சேலம், கடலூர், நேற்று தூத்துக்குடி மாவட்டங் களில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து   5-வது நாளாக வியாழக்கிழமை  மாலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க- கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தார்.

ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் மு. க .ஸ்டாலின் பிரசாரம் செய்ததை பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் 60 இடங்களில் பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரியார் நகரில் 80 அடி சாலையில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டிருந்தது.

இதில் அமைச்சர் முத்துசாமி, தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் 4 நகராட்சி, 42 பேரூராட்சி பகுதிகளில் பிரமாண்டத்தில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 106 இடங்களில் முதலமைச்சர் பிரசாரத்தில் தி.மு.க. வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top