புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தல் பிப்.19 -இல் நடைபெறுகிறது.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 7 நாள்களே இருப்பதால் தேர்தல் களம் வேட்பாளர்களின் பிரசாரத்தால் சூடு பிடித்துள் ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சியில் , 27, 14, 31, 29, 30, 13, 12, 10, 11, 3, 2, 1, 4, 9, 8, 7, 6, 19, 5, 20, 21 ஆகிய அனைத்து வார்டுகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி சனிக்கிழமை மேற்காணும் வார்டுகளில் பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
இதில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கேகே. செல்லபாண்டியன், எம்எல்ஏ டாக்டர் வை முத்துராஜா.நகரச் செயலாளர் க. நைனா முகமது. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில் 187 இடங்களுக்கு பிப்.19 -இல் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர் போட்டியிடுகின்றனர்.