Close
நவம்பர் 10, 2024 8:10 காலை

திமுக ஆட்சியில் கிடைத்த நன்மைகளுக்கு மக்களின் அங்கீகாரம் கிடைக்கும்: அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களு ஆதரித்து ரயில்வேஸ்டேஷன் ரவுண்டானா பகுதியில் பிரசாரம் செய்த அமைச்சர் மெய்யநாதன்

திமுக ஆட்சியில் கிடைத்த நன்மைகளுக்கு உரிய  அங்கீகாரம் அளிக்க மக்கள் தீர்மானித்துவிட்டனர் என்றார் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை நகராட்சியில்  போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 36 -ஆவது வார்டு வளர்மதி சாத்தையா, 24 -வது வார்டு ஆர்.மணிமேகலை, 37-வது வார்டு தெய்வானை மகேந்திரன், 22 -வது வார்டு வி. ராஜேந்திரன் ஆகியோருக்கு உதய சூரியன் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு புதுக்கோட்டை ரயில்வேஸ்டேஷன் ரவுண்டானா அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில்  அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசியதாவது:

தமிழக பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் கொரோனா நிவாரண நிதியாக சுமார் 2 கோடி மக்களுக்கு  வழங்கியவர் தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலின். தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பலவேறு திட்டங்களை நாட்டின் பல மாநில அரசுகள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும்  நிலை உருவாகியுள்ளது.

அந்த அளவுக்கு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதிலும் சமூக நீதியை நிலைநாட்டு வதிலும்  முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.   நாட்டிலுள்ள மாநில முதல்வர்களில் சிறந்த முதல்வர் என நமது முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்  .

மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பாலமாக விளங்கும்  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இந்த வெற்றியின் மூலம் இன்று பல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கவுள்ளது.  ஆகவே, இந்த 8 மாத கால ஆட்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழக மக்கள்  உறுதுணையாக நிற்கவேண்டும் என்றார் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top