Close
செப்டம்பர் 20, 2024 6:26 காலை

தண்ணீர் குடம் சுமந்து வாக்கு சேகரித்த புதுகை நகராட்சி 4 வது வார்டு விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 4 வது வார்டில் நூதன முறையில் வாக்கு சேகரித்த விஜய்மக்கள் இயக்க வேட்பாளர் ஜெ. பர்வேஸ்

புதுக்கோட்டை நகராட்சியில்  4 வது வார்டில்  விஜய் மக்கள் இயக்கம் சார்பில் களம் காணும் வேட்பாளர் ஜெ. பர்வேஸ்   வீடு வீடாக வாக்கு சேகரித்தபோது   குடத்தில் தண்ணீர் பிடித்து குடத்தை சுமந்து சென்று  மக்களிடம் கொடுத்து  நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு விஜய் மக்கள் இயக்க வேட்பாளராக போட்டி யிடுபவர் ஜெ. பர்வேஸ். இவர்  விஜய் மக்கள் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தலை வராக உள்ளார்.

தனது வார்டில் ஞாயிற்றுக்கிழமை  வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது  குடத்தில் தண்ணீர் பிடித்து அதை சுமந்து சென்று  பெண்களிடம் வழங்கி வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரித்தார்.

அப்போது அவரிடம் அப்பகுதி பெண்கள் தங்களுக்கு இந்த பகுதியில் நடை பயிற்சி செய்வதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனடியாக அந்த இடத்தை பார்வையிட்ட  பர்வேஸ், தான்  வெற்றி பெற்றவுடன், முதல் வேலையாக  இந்த பகுதியில் நடை பயிற்சி செய்வதற்குரிய  இடத்தை ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top