Close
ஏப்ரல் 3, 2025 11:48 மணி

இரவு பகலாக உழைப்பவர்களுக்கு மக்கள் வாக்களித்து ஊக்கப்படுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 5 வது வார்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை கோவில்பட்டி 5 வது வார்டு அதிமுக வேட்பாளர் விஜயஸ்ரீ பாஸ்கருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார்.

அப்போது,  அவர் பேசியதாவது:  இது எமஎல்ஏ, எம்பி தேர்தலோ அல்ல. நமது வார்டுக்கு நம் வீட்டுக்கும் நமது பகுதிக்கான தேவைகளை நிறைவேற்றக் கூடிய தேர்தல்.  கடந்த 10 ஆண்டுகளாக பம்பரமாகச் சுழன்று இந்த கோவில்பட்டிக்கு மட்டுமல்ல, புதுக்கோட்டைக்கும் பல திட்டங்களைக் கொண்டு வர பாடுபட்டவர் நகரச்செயலர்பாஸ்கர்.

இந்த அரசு ஒதுக்கீடு செய்யும் ரூ.1000 கோடியில் ரூ.1 கோடி நிதியை கோவில்பட்டி பிடாரிகோயில் மேம்பாட்டு பணிகளுக்காக நிச்சயம் பெற்றுத்தருவேன்.புதுக்கோட்டைக்கு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி போன்ற  பல திட்டங்களை கொண்டு வந்து குவித்தது அதிமுக அரசு. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆகிவிட்டது, கொடுக்கிறேன் என்று சொன்னதை இன்னும் கொடுக்காத ஆட்சி இது. புதுக்கோட்டை மன்னர் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அவரை தூக்கி விட்டது கோவில்பட்டி பகுதிதான்.

புதுக்கோட்டை
புதுகை நகராட்சி 5 வது வார்டு அதிமுக வேட்பாளர் பிரசாரத்தில் பங்கேற்ற மக்கள் கூட்டம்

24 மணி நேரமும் கால் தேயும் வகையில் உழைத்துக் கொண்டிருப்பவர் நகரச்செயலர் பாஸ்கர். அவரது குடும்பத்திலிருந்து அதிமுக சார்பில்  போட்டியிடும்  விஜயஸ்ரீ பாஸ்கருக்கு ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

இரவு பகலாக உழைப்பவர்கள்தான் நமக்கு உதவுவார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு வாக்களித்து ஊக்கப்படுத்துங்கள். ஆளும் கட்சியினர் வந்து தாங்கள்தான் எதையும் செய்ய முடியும் என்று கூறுவார்கள். அதை நம்ப வேண்டாம். கோவில்பட்டி முழு வளர்ச்சியையும் அடிப்படை வசதிகளையும் பெற்றது அதிமுக ஆட்சியில் தான் என்பதை நினைத்துப்பார்த்து இரட்டைஇலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர்   போட்டி யிடுகின்றனர். 5 -வது வார்டில் ஆண் பெண் உள்பட 3,225 வாக்காளர்கள் உள்ளனர்.  பிப்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top