Close
செப்டம்பர் 20, 2024 1:45 காலை

புதுகை நகராட்சி 36 வது வார்டு திமுக வேட்பாளர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி 36 -ஆவது வார்டில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்  எஸ். வளர்மதி சாத்தையா

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட 36 -ஆவது வார்டில்  போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். வளர்மதிசாத்தையா தனது வார்டில் வீடுவீடாகச் சென்று  வாக்குகள சேகரித்தார்.

புதுக்கோட்டை  நகராட்சி தேர்தலில் 36 -ஆவது வார்டு போட்டியிடும் திமுக வேட்பாளர்   வளர்மதி சாத்தையா செவ்வாய்க்கிழமை பூங்கா நகர், பெரியார் நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக   வாக்காளர்களை ச்சந்தித்து  உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நமது வார்டு பகுதிகளில் அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக இந்த பகுதிகளில் நீடிக்கும்  குடிநீர் தட்டுப்பாடு முக்கிய பிரச்னையாகும்.  இனிவரும் காலங்களில் தினந்தோறும் இந்த பகுதி மக்களுக்கு தட்டுப் பாடின்றி தண்ணீர் கிடைக்க பூங்கா நகர் பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வேன்.

இது தவிர பல்வேறு பகுதிகளில் தெரு விளக்குகள் எரியவில்லை மேலும் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. மேலும்  தேவைப்படும் இடங்களில் புதிய ரேஷன் கடை அமைப்பேன்.

புதுக்கோட்டை நகரின் ஒட்டு மொத்த கழிவு நீரும் மழை நீரும் பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள கால்வாய் வழியாக பூங்கா நக,ர் பெரியார் நகர் பகுதி வழியாக சந்திரமதி வாய்க்காலில் குண்டாறு செல்கிறது

இந்த வாய்க்காலில் செல்லும் கழிவுநீரை அந்தந்த பகுதிகளிலே தடுத்து  புதை சாக்கடை இணைப்பு குழாய் வழியாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுப்பேன்.இதனால் பல்வேறு நோய்கள் பரவுவது தடுக்கப்படும். அதற்கான முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவேன்.

மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் மழைநீரானது   பெரியார் நகர் பகுதி, பூங்கா நகர், மறைமலைநகர், பாரத் நகர், முத்துநகர் போன்ற பகுதிகளில் சூழ்ந்து மக்கள்   மிகவும் பாதிக்கப் படுகின்றனர்.

மழைநீர் செல்லும் இந்த சந்திரமதி வாய்க்கா லை அகலப்படுத்தி ஆழப்படுத்தி அகலமான சிமெண்ட் வாய்க்கால் அமைத்து குண்டாறு பகுதி வரை செல்லும் வகையில்  கட்டப்படும்

எனது வார்டில் பல பகுதிகளில் சாலையின் உயரத்தை விட வீட்டு மனைகளின் உயரம் மிகவும் தாழ்வாக உள்ளது இதனால் மழைக்காலங்களில் மழை வெள்ள நீர் வடியாமல் வீடுகளின் உள் பகுதிகளில் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.

அவர்களுக்காக வெள்ள நீர் வடியும் வகையில் குழாய்களை அமைத்து குடியிருப்புகளை சூழும் மழை வெள்ள நீர் தாழ்வான பகுதிகளை நோக்கி பாயும் வகையில் வகையில் நடவடிக்கை மேற்கொள்வேன்.

பொதுமக்களின் குறைகளை களைய எனது வார்டு பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படும் நகராட்சி வார்டு அலுவலகம் அமைத்து பொது மக்களின் குறைகளை தீர்த்து வைப்பேன்.

மேலும் இரவு நேரங்களில் திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் இருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வீதிகள் தோறும் பொதுமக்கள் சமூகநல அமைப்புகள் பங்களிப்போடு சிசிடிவி கேமரா அமைக்க முயற்சி செய்வேன். வார்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மறு சீரமைத்து பொதுமக்கள் பொழுது போக்கத்தகுந்த இடமாக மாற்றுவேன் என்று 36 -ஆவது வார்டு திமுக வேட்பாளர்   வளர்மதி சாத்தையா கூறினார்.   இந்த வார்டில் ஆண் பெண் உள்பட மொத்தம் 1897 வாக்காளர் கள் உள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர்   போட்டி யிடுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 189 இடங்களில்   187 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு  மொத்தம் 902 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.  தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top