புதுக்கோட்டை நகராட்சி 24 -ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர். மணிமேகலைக்கு ஆதரவாக திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார்.
புதுக்கோட்டை நகராட்சி 24 -ஆவது வார்டு திமுக வேட்பாளரும் முன்னாள் அரசு கொறடா பெரியண்ணனின் மகளும், முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன்அரசு -வின் சகோதரியுமான ஆர். மணிமேகலைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சு. திருநாவுக்கரசர் பிரசாரம் செய்தார்.
திமுக வேட்பாளர் மணிமேகலை கூறியதாவது: தான் வெற்றி பெற்றால் பெரியார் நகரை புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் முன்னோடி வார்டாக மாற்றிக் காட்டுவேன். மக்களின் கோரிக்கைகளை தீர்க்க மாதம் இரண்டு முறை குறைதீர் கூட்டம் நடத்தப்படும் .
உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரட்டும் என்ற உயர்ந்த சிந்தனையில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட அல்லும் பகலும் அயராது பாடுபட்டு இந்திய அளவில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற சூளுரை ஏற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் அன்பு மகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் நான் சார்ந்து இருக்கக்கூடிய பெரியார் நகர் பகுதிk்கு வாரம் மூன்று முறை நிறைவான குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சர் முதல் அமைச்சர் வரை மக்களின் கோரிக்கையை நேரில் கவனத்துக்கு கொண்டு சென்று கோரிக்கைகளை நிறைவேற்றினேன்.
பெரியார் நகரில் உள்ள குடிநீர் பெரியார் நகரில் உள்ள கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால்களை சீரமைத்து தண்ணீர் தேங்காமல் வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும், அனைத்து தெரு விளக்குகளையும் முறையாக பராமரித்து விளக்குகள் தங்கு தடையின்றி எரிவதற்கும், குற்றச் சம்பவங்களை அறவே ஒழிக்கும் நோக்குடன் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கவும், அனைத்து சாலை சந்திப்புகளிலும் கண்காணிப்பு கேமரா அமைத்து நகரை பாதுகாத்திடவும் . சாதிச் சான்று ரேஷன் கார்டு மற்றும் அரசு சார்ந்த அனைத்து சான்றிதழ்களும் பொது மக்களுக்கு உடனுக்குடன் கிடைத்திட அரசு இ-சேவை மையம் அமைக்கப்படும்.
முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை காலதாமதமின்றி பெற்றுத் தரப்படும், காலியாக உள்ள இடங்களில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி செய்வதற்கான அரங்கமும், பொழுதுபோக்கு பூங்கா, நடைபயிற்சி பாதை அமைத்து தருவேன்.
தமிழக முதல்வர் இல்லத்தரசிகளுக்கு விரைவில் வழங்க இருக்கக்கூடிய மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை அனைவருக்கும் பெற்றுத் தருவேன் என்றார் திமுக வேட்பாளர் ஆர் மணிமேகலை..