அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக
19 வது வார்டு மக்களுக்கு திமுக வேட்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.
கோபி நகராட்சி 19 வது வார்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆசியுடன், வேட்பாளர் குமரேசன் போட்டியிடுகிறார். மாவட்ட செயலாளர் நல்லசிவம், கோபி நகர செயலாளர் நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது வேட்பாளர் குமரேசன் கூறியதாவது:
மேலும், வார்டு பகுதி மக்களுக்கு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் அரசு நலத்திட்டங்களின் உதவித்தொகைகள் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சி புதிய அபிவிருத்தி குடிநீர் திட்டம் விரைவில் முடித்து தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குப்பாண்டர் வீதியில் உள்ள கிணற்றுக்கு மேல் மூடி அமைத்து தரப்படும். தங்கமணி எக்ஸ்டன்சன், குப்பாண்டர் வீதி 1 முதல் 7 வீதி வரை கழிவு நீர் வெளியேற வசதியாக வாய்க்கால் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
கோகுலம் நகர், கவிதா கார்டன், ஜோதி நகர் நடைபயிற்சி மேடை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். பச்சைமலை ரோடு, மயூரா நகரில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தண்ணீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
கோகுலம் நகர், மயூரா நகர், ஜோதிநகர், கவிதா கார்டன் பகுதிகளில் உள்ள காலி மனையிடத்தில் நகராட்சி வாயிலாக புல், புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வார்டு மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதாகவும் குமரேசன் தெரிவித்தார்.