அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக
37 -ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 37 -ஆவது வார்டில் ரேஷன் கடை, குடிநீர், புறக்காவல் நிலையம், டவுன் பஸ், பொது நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதாக அதிமுக வேட்பாளர் வை. பாரதி வாக்குறுதி அளித்து உள்ளார்.
புதுக்கோட்டை நகராட்சி 37-ஆவது வார்டில், ஒருங்கிணைப் பாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ், முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோரது ஆசியுடன், வேட்பாளர் வை. பாரதி போட்டியிடுகிறார்.
37 -வது வட்டக் கழகச்செயலர் ஜீவாசெல்வராஜ், துணைச்செயலர் வைரமூர்த்தி, இணைச்செயலர் அண்ணக்கிளிநாகராஜ், என். சிவராஜ், சந்திரன், முத்துகிருஷ் ணன், அஞ்சம்மாள்சிவராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேட்பாளர் வை. பாரதி கூறியதாவது:
நமது வார்டில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்னை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்குகள் அனைத்தும் உடனடியாக சரி செய்யப்படும். சாலை வசதிகள் செய்து தரப்படும்.
தெருக்களில் வார்டில் அனைத்து பகுதிகளிலும் குப்பைத்தொட்டி அமைத்து தரப்படும். பாதாளச் சாக்கடை, கழிவுநீர் சரி செய்யப்படும்.
ஆழ்துளை கிணறு, மின்சார மோட்டார் பொருத் திய டேங்க் வசதி தேவையான பகுதிகளில் செய்து தரப்படும் நமது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பூங்கா நகர் பகுதியில் கூட்டுறவு அங்காடி (ரேசன் கடை) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர பேருந்து வசதி செய்து தரப்படும். பள்ளிக் குழந்தைகளுக்குஅறிவுதிறன்வளர்க்கும் வகை யில் வார்டின் மையப்பகுதியில் பொதுநூலகம் அமைத்து தரப்படும்.
நமது வார்டில் தினமும் குப்பைகளை சுத்தம் செய்யப்படும். கழிவு நீர் வாய்க்கால் வசதி செய்து தரப்படும்.வாரத்திற்கு இரண்டு முறை கொசு மருந்து வார்டு முழுவதும் அடிக்கப்படும். நமது வார்டில் புறநகர் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.