Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

தமிழ்நாடு நகர்ப்புற(19.2.2022) உள்ளாட்சித் தேர்தல்:  வாக்காளர்கள் சுமார் 2.50 கோடி பேர் 

தேர்தல்

வாக்குப்பதிவு

தமிழ்நாடு நகர்ப்புற(19.2.2022) உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சுமார் 2.50 கோடி வாக்காளர்கள் தயாராக உள்ளனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கு சனிக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

இந்த தேர்தலில் 2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர்.வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், அடையாள மை, வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வாக்குச் சாவடிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வார்டு வாரியாக பிரதான மற்றும் துணை வாக்காளர் பட்டியல்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் 268 வாக்கு எண்ணும் மையங்கள் குறித்த விவரங்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி தேர்தலில் வார்டு வாரியாக களத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம்:

புதுகை நகராட்சி 1 -ஆவது வார்டு: ரெ. சேகர்(அதிமுக), சி. கீதா(பாஜக), ரெ. கிருஷ்ணகுமார்(அமமுக), அ.ம. சலீம்(நாம் தமிழர் கட்சி) உள்பட 9 பேர் போட்டி.

2-ஆவதுவார்டு:சி.மதியழகன்(திமுக),ரெ.செல்வராஜன் (அதிமுக), ச.சுதர்சன் (பாஜக), சி. புகழேந்தி(நாம் தமிழர் கட்சி) உள்பட 5 பேர் போட்டி.

3-ஆவதுவார்டு:செ.கார்திகைசெல்வி(திமுக),ஆ.விமலா (அதிமுக), கு. வளர்மதி (பாஜக), ஜான்சிராணி (நாம்தமிழர் கட்சி) உள்பட 5 பேர் போட்டி.

4-ஆவதுவார்டு:ரா.ரமேஷ்(திமுக),ரெ.கோமதிசங்கர் (அதிமுக), மு. சுப்பிரமணியன்(பாஜக), க. ராமச்சந்திரன்(நாம் தமிழர் கட்சி) உள்பட 8 பேர் போட்டி.

5-ஆவது வார்டு: வீ.குமார்(திமுக), பா. விஜயஸ்ரீ(அதிமுக), பெ. முருகேசன்(பாஜக), ரா. கலைச்செல்வன்(நாம்தமிழர் கட்சி) உள்பட 7 பேர் போட்டி.

6-ஆவதுவார்டு: வீ.சாந்தகுமார் (காங்கிரஸ்), மா.சத்யா (அதிமுக),   ர. சசிகலா(பாஜக), கோ.செஞ்சுலட்சுமி(நாம் தமிழர் கட்சி) உள்பட 6 பேர் போட்டி.

7-ஆவதுவார்டு:எஸ்.என்.எம்.ராஜாத்தி(திமுக), மு.பரிதாபானு (அதிமுக), செ. செல்வி(பாஜக), ர. மகேஸ்வரி(நாம் தமிழர்) ஆகிய 4 பேர் போட்டி.

8-ஆவது வார்டு: அ. அனுராதா(திமுக), அ.. மீனா(அதிமுக), லெ. சுகன்யா(பாஜக),த.சிவபாக்கியம்(நாம் தமிழர் கட்சி) உள்பட 6 பேர் போட்டி.

9-ஆவது வார்டு: டி. செந்தாமரை(திமுக), சி. பிரேமா(அதிமுக), அ.பெரியநாயகி(நாம் தமிழர்கட்சி) உள்பட 4 பேர் போட்டி.

10-ஆவது வார்டு: மை. பால்ராஜ்(திமுக), மா. சதீஷ்குமார்(அதிமுக), த. ஜெயசீலன்(நாம் தமிழர் கட்சி),க. வீரையா(அமமுக) உள்பட 11 பேர் போட்டி.

11 -ஆவது வார்டு: ஜெ. கமலா(திமுக), ஆ. அர்ச்சனா(அதிமுக), மகேஸ்வரி(நாம் தமிழர் கட்சி), அன்புமேரி(அமமுக) ஆகிய 4 பேர் போட்டி

12-ஆவதுவார்டு: ர.மலர்வள்ளி (திமுக), அ.செந்தில்மதி (அதிமுக), கோ.செஞ்சுலட்சுமி(நாம் தமிழர் கட்சி) உள்பட 4 பேர்.

13-ஆவதுவார்டு: அ. அமுதா(காங்கிரஸ்), மெ. ராதிகா(அதிமுக), ரா. அமுதா(பாஜக), மு. மணிமாலா(அமமுக) உள்பட 6 பேர் போட்டி.

14-ஆவது வார்டு:பி.காந்திமதி(திமுக), மு. உடையம்மை (அதிமுக), க.துர்கா தேவி(நாம் தமிழர் கட்சி) ஆகிய 3 பேர் போட்டி.

15 – ஆவது வார்டு: ரெ. காசிலிங்கம்(திமுக) அ. அய்யப்பன்(அதிமுக), இரா.சு.பா. காடுவெட்டிகுமார்(பாஜக), தி. ரவிச்சந்திரன்(நாம் தமிழர் கட்சி) உள்பட 13 பேர் போட்டி.

16- ஆவது வார்டு: என்.ஹவ்வாகனி(திமுக), அ. அப்துல்ரஹ்மான்(அதிமுக), அ. அப்பாஸ்(நாம் தமிழர் கட்சி),ச. பஹ்ருதீன்(அமமுக) உள்பட 8 பேர் போட்டி.

17-வது வார்டு: மு. லியாகத்அலி(திமுக), பா. கண்ணன்(அதிமுக), செ. கமலாதேவி(தேமுதிக), மு. சபரீஷ்(நாம் தமிழர் கட்சி) உள்பட 6 பேர் போட்டி.

18 ஆவது வார்டு: ச. கவிதா(திமுக), நா. பாரதி(அதிமுக), க. மல்லிகா(பாஜக), ர. மகேஸ்வரி(நாம் தமிழர் கட்சி) உள்பட 6 பேர் போட்டி.

19-ஆவது வார்டு: ரா. ராஜேஸ்வரி(காங்கிரஸ்), ச. அங்கயற்கண்ணி(அதிமுக), ர. அனுப்பிரியா(நாம் தமிழர் கட்சி) உள்பட 7 பேர் போட்டி.

20-ஆவது வார்டு: ஜெ. ரமேஷ்பாபு(திமுக), க. மாரிமுத்து(அதிமுக), து. வெங்கடேஷ்( நாம் தமிழர் கட்சி) உள்பட 5 பேர் போட்டி.

21-ஆவது வார்டு: மெஹர்பானு(திமுக ),மலர்விழிமுத்து (அதிமுக), மு. பானுமதி(நாம்தமிழர் கட்சி) உள்பட 5 பேர் போட்டி.

22-ஆவதுவார்டு:வே.ராஜேந்திரன்(திமுக),சி.ராஜேஸ்வரன் (அதிமுக), ஜி.சீனிவாசன்(பாஜக), க. தியாகராஜன்(நாம் தமிழர் கட்சி) உள்பட 11 பேர் போட்டி.

23-ஆவதுவார்டு:ரெ.பாலகிருஷ்ணன்(திமுக), அ.தவமணி (அதிமுக), ஆர்.கே. மணிராஜன்(பாஜக), ச. அப்துல்மஜீத்(நாம் தமிழர் கட்சி) உள்பட 9 பேர் போட்டி.

24-ஆவதுவார்டு: இரா.மணிமேகலை(திமுக), சீ.ஆனந்தி (அதிமுக),  சி. சசிகலா (பாஜக), த. சிவபாக்கியம்(நாம் தமிழர் கட்சி) , ரெ. ருபாராணி(சுயே) உள்பட 6 பேர் போட்டி.

25-ஆவதுவார்டு:செ.திலகவதிசெந்தில்(திமுக), புரு. கிருஷ்ண குமார்(அதிமுக), க. பிரபாகரன்(நாம் தமிழர் கட்சி) ஆகிய 3 பேர் போட்டி.

26-ஆவதுவார்டு:க.லதா(ம-திமுக), துவளத்தாமம்கலியமூர்த்தி (அதிமுக), பி. கார்த்திகா(பாஜக), கு. சண்முகப்பிரியா(நாம தமிழர் கட்சி) உள்பட 5 பே்ர் போட்டி.

27 -ஆவது வார்டு: ஏ.எம். சையதுஇப்ராஹிம்(காங்கிரஸ்), மீ. கனகசபை(அதிமுக), ரா. நடராஜன்(பாஜக), க. துரைசரவணன்(நாம் தமிழர் கட்சி), எஸ். மூர்த்தி(சுயே) , ப. ராணி(சுயே) உள்பட 12 பேர் போட்டி.

28-ஆவது வார்டு: க. எட்வர்டு சந்தோஷநாதன்(திமுக), ச. ஜனனி(அதிமுக), இரா. வீரப்பன்(நாம் தமிழர் கட்சி) ராஜாபஹதூர்(அமமுக) உள்பட 9 பேர் போட்டி.

29-ஆவது வார்டு: சுப. சரவணன்(திமுக), ச. ஸ்டாலின்(அதிமுக), மு. மதன்குமார்(பாஜக), கே. மணிகண்டன்(நாம் தமிழர் கட்சி) உள்பட 8 பேர் போட்டி.

30-ஆவது வார்டு: ஆர். லதா(திமுக), ஆ. காஞ்சனா(அதிமுக), ஆர். வனஜா (பாஜக), ச. புவனேஸ்வரி(நாம்தமிழர்கட்சி) உள்பட 7 பேர் போட்டி.

31-ஆவது வார்டு: தங்கமணி(திமுக), ப. சுமதி(அதிமுக), தரணிகா(பாஜக), க. கலா(தேமுதிக), பா. ஜான்சிராணி(நாம் தமிழர் கட்சி),

32 -ஆவது வார்டு: கே. இந்துமதி(திமுக), க. ஜெயா(அதிமுக), வீ. முத்துலெட்சுமி(தேமுதிக) கோ. செஞ்சுலட்சுமி(நாம் தமிழர் கட்சி), மகேஸ்வரி(அமமுக) உள்பட 6 பேர்.

33-ஆவது வார்டு: ரா. ராஜேஸ்வரி(திமுக), கு. ஆயிரம்வள்ளி(அதிமுக), ஷாலினி(பாஜக), ம. புவனேஸ்வரி (ஆம்ஆத்மி) பானுமதி (நாம்தமிழர்கட்சி) கார்த்திகா(அமமுக) உள்பட 7 பேர் போட்டி.

34- ஆவது வார்டு: ஜே. ராஜாமுகமது(காங்கிரஸ்), மு. அப்துல்ரஹீம்(அதிமுக), மு. அப்துல்ஜபார்(ஆம் ஆத்மி), ச. வினோத்குமார்(நாம் தமிழர் கட்சி), ஆ. செல்வகுமார்(அமமுக) உள்பட 8 பேர் போட்டி.

35-ஆவது வார்டு: மு. ஜாகீர்உசேன்(திமுக), இ. ஆனந்தன்(அதிமுக), மு. அன்வர்முகமது(நாம் தமிழர் கட்சி) உள்பட 5 பேர் போட்டி.

36-ஆவது வார்டு: வளர்மதிசாத்தையா(திமுக), அ. இன்பவள்ளி(அதிமுக), க. துர்காதேவி(நாம் தமிழர் கட்சி) ஆகிய 3 பேர் போட்டி.

37-ஆவது வார்டு: ம. தெய்வானை(திமுக), வை. பாரதி(அதிமுக), மு. பானுமதி(நாம் தமிழர் கட்சி) உள்பட 8 பேர் போட்டி.

38 -ஆவது வார்டு: மு. காதர்கனி(திமுக), சு. நடராஜன்(அதிமுக), மு. சாந்தி(பாஜக), மு. கார்த்திக்(நாம் தமிழர் கட்சி) ரா. அய்யனார்(அமமுக) உள்பட 8 பேர் போட்டி.

39-ஆவது வார்டு: பெ. ராஜேஸ்வரி(திமுக), செ. செல்வராணி(அதிமுக), க. துர்காதேவி( நாம் தமிழர் கட்சி) உள்பட 5 பேர் போட்டி.

40-ஆவது வார்டு: ச. ஆரோக்கியசாமி(திமுக), சு. செந்தில்குமார்(அதிமுக), த. ரவீந்திரன்(பாஜக), கரு. பழனியப்பன்(நாம் தமிழர் கட்சி) உள்பட 9 பேர் போட்டி.

41-ஆவது வார்டு: சு. முத்துக்கருப்பன்(திமுக), க. பாண்டியன்(அதிமுக), பெ. ஆறுமுகம்(பாஜக), மு. அருண்குமார்(நாம் தமிழர் கட்சி), ஜெய்பார்தீபன்(மநீம) உள்பட 9 பேர் போட்டி.

42-ஆவது வார்டு: க. கவிவேந்தன்(திமுக), செ. சக்திவேல்(அதிமுக), ப. பரமஜோதி(தேமுதிக), கு. முனுசாமி(நாம் தமிழர் கட்சி) உள்பட 5 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டு களில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இதில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர் போட்டி யிடுகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50 % இடங்களை மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் பகுதிகளில் மொத்த 189 இடங்கள் உள்ளன. இதில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 2 இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 187 இடங்களுக்கு பிப்.19 -(சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. 187 இடங்களுக்கு மொத்தம் 902 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top