Close
செப்டம்பர் 20, 2024 1:38 காலை

நகர்புற உள்ளாட்சித்தேர்தல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்

புதுக்கோட்டை

புதுகை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் (பிப் 19-சனிக்கிழமை) வாக்குப்பதிவு காலை7 மணி முதல் மாலை வரை நடை பெறுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் உள்ள. 187 பதவிக ளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 872 வாக்காளர்கள் உள்ளனர். வாக்களிப்பதற்காக 187 வாக்குச்சாவடி மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன.  67 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கண்டறிப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது .

வாக்குப்பதிவை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுக்கோட்டை நகராட்சியை பொருத்த வரை 42 வார்டுகள் உள்ளன.

இதில் 120 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 669 வாக்காளர்கள் உள்ளனர். .அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன 37 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்களிப்பதற்கு 39 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள 8 பேரூராட்சிகள் தலா 15 வார்டுகள் உள்ளன. மக்கள் வாக்களிப்பதற்கு தலா 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணி யில் 600க்கு மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சி தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையாற்றிய அமைச்சர், எம்எல்ஏ, வேட்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்:

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தனது 27 வார்டுக்குள்பட்ட குலபதி பாலையா பள்ளியில் வாக்களித் தார்.

புதுக்கோட்டை
தேர்தலில் தனது வார்டில் வாக்களித்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா தனது 39 -ஆவது வார்டிலுள்ள பள்ளியில் வாக்களித்தார்.

புதுக்கோட்டை
புதுகை நகராட்சி தேர்தலில் வாக்களித்த எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை நகராட்சி 25 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திலகவதி செந்தில் சாந்தநாதபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை செலுத்தினார்.

 

புதுக்கோட்டை
வாக்களித்த 25 வது வார்டில் வாக்களித்த திமுக வேட்பாளர் திலகவதிசெந்தில்

திமுக பொருளாளருமான ஆ. செந்தில் தனது பகுதி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

புதுக்கோட்டை நகராட்சி 16-வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேட் என்ற அப்துல்ரஹ்மான் தனது வாக்கை பதிவு செய்தார்.

புதுக்கோட்டை
புதுகை நகராட்சி 16 -வது வார்டில் வாக்களித்த அதிமுக வேட்பாளர் எஸ். அப்துல்ரஹ்மான் என்ற சேட்

புதுக்கோட்டை நகராட்சி 27-ஆவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அப்பு(எ) கனகசபை தனது வாக்கை குலபதி பாலையா பள்ளியில் பதிவு செய்தார்.

புதுக்கோட்டை
வாக்களித்த 27 வது வார்டு அதிமுக வேட்பாளர் அப்பு (எ) கனகசபை

27 ஆவது வார்டுக்குள்பட்ட குலபதி பாலையா பள்ளி வாக்குச் சாவடியில், தொழிலதிபரும் முன்னாள் நகராட்சித் தலைவர் எஸ். சிவசாமிசேர்வையின் பேரனுமான எஸ்.வி.எஸ். ஜெயகுமார் வாக்களித்தார்.

புதுக்கோட்டை
நகராட்சி தேர்தலில் வாக்களித்த தொழிலதிபர் எஸ்.வி.எஸ். ஜெயகுமார்.

36-ஆவது வார்டு திமுக வேட்பாளர் வளர்மதிசாத்தையா தனது வார்டுக்குள்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

புதுக்கோட்டை
தேர்தலில் வாக்களித்த 36 வது வார்டு திமுக வேட்பாளர் வளர்மதி- சாத்தையா

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50 % இடங்களை மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. இதில், புதுக் கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் பகுதிகளில் மொத்த 189 இடங்கள் உள்ளன.

இதில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 2 இடங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 187 இடங்களுக்கு (பிப்.19- சனிக்கிழமை) ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. 187 இடங்களுக்கு மொத்தம் 902 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 21 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இதில், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சுயேட்சைகள் என மொத்தம் 282 பேர் போட்டி யிடுகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top