Close
செப்டம்பர் 20, 2024 6:59 காலை

சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) தேர்தல்: புதிய நிர்வாகிகள் தேர்வு

சென்னை

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்

சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ)  நடத்தப்பட்ட தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் 2022-2023 -ஆம் ஆண்டு நிர்வாகிகள் தேர்தல்  (20-.02.-2022) நடைபெற்றது. இதில் 81.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற் றது. பதிவான வாக்குகள் உடனே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, தலைவர் (போட்டியின்றித் தேர்வு) பதவிக்கு
எல்.ஆர்.சங்கர், போட்டோ எடிட்டர், தி டைம்ஸ் ஆப் இந்தியா.

பொதுச்செயலாளர்- வ.மணிமாறன், மூத்த இணை ஆசிரியர், மக்கள் டிவி.

துணைத் தலைவர்கள்-வே.புகழேந்தி, மூத்த செய்தியாளர், தினகரன் நாளிதழ். பிருந்தா சீனிவாசன், உதவி செய்தி ஆசிரியர், இந்து தமிழ் திசை.

பொருளாளர்- வே.ஸ்ரீதர், தலைமை செய்தியாளர்,
விடுதலை நாளிதழ்.

இணைச் செயலாளர்- சு.குருவன்மிகநாதன்,
மூத்த செய்தியாளர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

செயற்குழு உறுப்பினர்கள்- திருமேனி சரவணன், முதுநிலை துணை ஆசிரியர் சன் டிவி.  த.இளங்கோவன்,  செய்தியாளர், முரசொலி. சசிரேகா காந்தி, தலைமை செய்தியாளர், சிகரம் மீடியா. ம.அய்யனார் ராஜன், மூத்த செய்தியாளர் ஆனந்த விகடன். த.பழனிவேல் (தெக்கூர் அனிதா), மூத்த உதவி ஆசிரியர், குமுதம்.

1954- ஆம் ஆண்டு துவங்கிய சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் ( MUJ) கடந்த 15 ஆண்டுக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top