Close
நவம்பர் 22, 2024 12:27 காலை

புதுக்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு: ஆட்சியர் கவிதாராமு திறப்பு

புதுக்கோட்டை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு கிடங்கை திறந்து வைத்த ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டடத்தினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (14.06.2022) திறந்து வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்கினை உறுதி செய்யும் கருவி ஆகியவற்றினை பாதுகாப்பான முறையில் வைத்திடும் வகையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை, அலுவலர்களுக்கான அறை, சோதனை அறை, சாய்வுதளம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றி இறக்குவதற்கான இடம், கழிவறை மற்றும் பாதுகாப்பு அறைகளுடன் 755 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட் டுள்ளது.

மேலும் இவ்வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் தீயணைக்கும் கருவி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் அமையப் பெற்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர் கள் அபிநயா (புதுக்கோட்டை), சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), குழந்தைசாமி (இலுப்பூர்), பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பி.சிந்தனைசெல்வி, உதவிப்பொறியாளர் பாஸ்கர், தனி வட்டாட்சியர் (தேர்தல்) கலைமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top