Close
நவம்பர் 25, 2024 6:11 காலை

மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு கல்லூரி விரிவுரையாளர்கள்

புதுக்கோட்டை

ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடர்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருநாவலூர் அரசுக் கல்லூரி விரிவுரையாளர்கள்

மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  கல்லூரி விரிவுரையாளர்கள்.. கண்டுகொள்ளாத அரசு,  இவர்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்ற கேள்வி தொடர்கிறது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, பெருநாவலூர் அரசு கலைக்கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (ஜூன், ஜூலை ,ஆகஸ்ட்) ஆகிய மூன்றுமாதமாக   நிலுவையில் உள்ள ஊதியம்  மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் மணிநேர விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமான ரூ=12,000 to 20,000 – த்தை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி,

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்ற அறந்தாங்கி, பெரம்பலூர், ஒரத்தநாடு, லால்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், வேதாரணியம், நாகப்பட்டினம்,  வேப்பூர் மற்றும் திருவரங்கம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட  உறுப்பு கல்லூரிகளில்  பணியாற்றும்  600 -க்கும் மேற்பட்ட கௌரவ மற்றும் மணி நேர விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சனிக்கிழமை முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்றாவது நாளாக  திங்கள்கிழமையும்  உள்ளிருப்பு போராட்டம் தொடர்கிறது, இந்த போராட்டம் சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தவோ, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவோ தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திமுக அரசு உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை அழைத்துப்பேசி இந்த போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காணவேண்டுமென று பொதுமக்களும் ஆசிரியர்களும்  மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top